Saturday, July 23, 2016

நல்லதா நாலு வார்த்தை... 69



'வாழ்க்கை விரிகிறது, சுருங்குகிறது 
நம் துணிவின் அளவுக்கு.'
- Anais Nin
('Life shrinks or expands in proportion to one's courage.')
<>

'வளமான காலங்களில், 
நண்பர்கள் நம்மை அறிகிறார்கள்;
இடரான போதில், 
நாம் நண்பர்களை அறிகிறோம்.’
- John Churton Collins
(’In prosperity, our friends know us; in
adversity we know our friends.’)

<>

'குடும்பத்துடன் விடுமுறைப் பயணம் என்பது
நாலு குழந்தைகளோடு ஐந்து பெட்டிகளுடன்
ஏழு ‘நீ எடுத்திருப்பாயென்று நான் நினைத்தே’னுடன்
ஒரு இடத்துக்கு வந்து சேருவது.'
- Ivern Ball
('A family vacation is one where you arrive with five bags,
four kids and seven I-thought-you-packed-its.')
<>

'மனித குலத்துக்கு சேவை செய்வதே 
வாழ்வின் ஒரே அர்த்தம்.'
- Leo Tolstoy
('The sole meaning of life is to serve humanity.')
<>

'காலம் ஒரு திசையில் 
செல்கிறது, 
நினைவு இன்னொன்றில்.'
- William Gibson
('Time moves in one direction, memory in another.')

<>

'காத்திருப்பவர்களுக்கு 
எல்லாம் கிடைக்கலாம், 
ஆனால் விரைந்து செயலாற்றுபவர்              
விட்டுச் செல்பவற்றிலிருந்தே.'
- Abraham Lincoln
('Things may come to those who wait, but only
the things left by those who hustle.')

<>

'அதற்கான நம் தகுதி எத்தனை குறைந்ததோ
அத்தனை அதிகம் எதிர்பார்க்கிறோம்
அதிர்ஷ்டத்தை.'
- Lucius Annaeus Seneca
('The less we deserve good fortune,
the more we hope for it.')
<>

'காலம் கடந்த பின்பே
கண்டறிகிறான் ஒருவன்,
நிஜத்தில் முக்கியமான தன்
வாழ்வின் கணங்களை.’
- Agatha Christie
('One doesn't recognize the really important
moments in one's life until it's too late.')
<>

'அச்சப்படுவதிலிருந்து 
அகன்றபின்னரே
ஆரம்பிக்கிறோம் வாழ.'
- Dorothy Thompson
('Only when we are no longer afraid do we begin to live.')
<>

'செல்லும் திசையை மாற்றாவிடில் 
நீங்கள் நோக்கிச் செல்கிற இடத்தையே 
சென்றடைய நேரிடும்.'
- Lao Tzu
('If you do not change direction, you may 
end up where you are heading.')

><><><

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நிலாமகள் said...

கடைசி மூன்றும் ரொம்பப் பிடிக்குது.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

தொகுப்பு அருமை நண்பரே. இரண்டாவது வள்ளுவர் சொன்னது(குறள்கே-ட்டினும் உண்டோ) ஒன்பதாவது கருத்து தாகூர் சொன்னதுதான்.(Where the mind is with out fear, and the head is held high) எனினும் தொகுப்பு நன்று. பாராட்டுகள். தொடருங்கள். தொடர்வோம்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அடடே! இப்பத்தான் கவனித்தேன். மின்னஞ்சலில் பொருட்பகுதியில் இட்ட முதல்கருத்தும் வள்ளுவர் சொன்னதுதான்...வெள்ளத்தனைய மலர்நீட்டம், மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!