Wednesday, February 26, 2014

நல்லதா நாலு வார்த்தை… 26


'எந்த அளவு வேலையும்
எவரும் செய்ய முடியும்,
அவர் அப்போதுசெய்யவேண்டிய வேலை
அதுவாக இல்லையெனில்!'
-Robert Benchley
('Anyone can do any amount of work, provided it isn't
the work he is supposed to be doing at that moment.')
<> 
'எதையேனும் மறக்கமுயலும்வரை
தெரியவில்லை,
எத்தனை அரிய ஞாபக சக்தி
இருக்கிறது நமக்கென்று!'
- Franklin Jones
('You never realize what a good memory you have
until you try to forget something.')
<>

'மிகச்சிறந்த நோக்கத்தை விட
மிகச் சிறிய செயல்
மேல்.'
- John Burroughs
('The smallest deed is better than
the greatest intention.')
<>

'நாம் யாரென்று
நாம் நம்புகிறோமோ
அவர்களே நாம்.'
- C. S. Lewis
('We are what we believe we are.'
<>

'நீளத்தில் குறைவதை
உயரத்தில் சரி செய்து கொள்ளுகிறது
மன மகிழ்வு.'
- Robert Frost
('Happiness makes up in height for what
it lacks in length.')
<>

'அனைத்தும் இழப்பினும்
அடுத்து மீண்டும் தொடங்குவது...
அதுதான் வாழ்க்கை!'
- A.J.Cronin
('That is life...to begin again when everything is lost!')
<>

'தனக்கு வேண்டியதைத் தேடி
தரணி எல்லாம் பயணிக்கும் ஒருவன்
வீடு திரும்ப,
அதைக் கண்டுகொள்கிறான்.'
-George Moore
('A man travels the world over in search of what
he needs and returns to find it.')

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)
 
 
 
 
 
 
 
 
 

Sunday, February 16, 2014

கிடைக்க வேண்டியது....

 
அன்புடன் ஒரு நிமிடம் - 54
 கிஷோருக்கு வருத்தமான வருத்தம். அந்த அவன் மிக மிக எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கவில்லைநழுவிப் போய்விட்டது.
எத்தனை நிச்சயமாக இருந்தான்? எல்லா வகையிலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு  வந்தவனுக்கு, எல்லா பிராஜெக்டுகளிலும் வெற்றியை அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு வாரமாயிற்று அவன் சரியாகச் சாப்பிட்டு. ஒழுங்காகத் தூங்கி. யாரோடும் சகஜமாகப் பேசி.

யாழினியோடு கூட.  

ராகவ் ஒரு முறை போன்  செய்த போதும் சரியாகப் பேசாமல் அவர் யாழினியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று காரணத்தை.
இந்த சூழ்நிலையில் கார் வேறு மக்கர் செய்ய ஆரம்பித்திருந்தது. என்னவோ ரிப்பேர். ராகவ்  கொஞ்சம் விஷயம் தெரிந்தவர். அவ்வப்போது அதில் நேரும் சங்கடங்களை ஆராய்ந்து என்ன பண்ணணும்  என்று ஐடியாக்கள் தருபவர் என்பதால் அவரிடம் போக நேர்ந்தது.

போனால்...

"அப்படியே விட்டிட்டுப் போ. அப்புறமா பார்க்கிறேன். இப்ப மூட் இல்லை," என்றார். முகத்தைத் தொங்கப் போட்டபடி வாட்டமாக இருந்தார். தன்னைவிட மோசமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
"என்ன ஆச்சு மாமா?" கேட்காமல் இருக்க முடியவில்லை.

"ஒண்ணுமில்லேடா!" சிரித்தார் தீனமாக. "ரெண்டு மூணு நாளாக ஒரே யோசனை. என்னை நினைச்சு எனக்கே வெட்கமா இருக்குடா!"

"எதனால் மாமா அப்படி?"

'போன வாரம் ஒரு தகவல் கட்டுரை படிச்சேன். இந்த உலகத்தில் கிடைக்கிற மொத்த செல்வங்களின் அளவு பற்றி விலாவாரியாக எழுதியிருந்தாங்க. அதை அப்படியே பகிர்ந்து அளித்தால் சராசரியா ஒரு மனிதனுக்கு என்ன அளவு கிடைக்கும்னு கணக்குப் போட்டுப் பார்த்தேன். அந்த அளவோட எனக்கு,  ஒரு மனுஷனான எனக்குக் கிடைச்சிருக்கிற சவுகரியங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். பார்த்ததிலேயிருந்து ஒரு அயர்ச்சிசராசரிக்கும் ஐம்பது மடங்கு எனக்கு கிடைச்சிருக்கு. என்னைக் கொஞ்சம் நெளிய வெச்சிட்டது அது. அப்படி பெறுவதற்கு எனக்கு அடிப்படையில என்ன  தகுதி இருக்கு? I felt ashamed. Very much!"

புள்ளி விவரங்களை அடுக்கி அவர் பேசிக்கொண்டே போக...அவருக்கு என்ன பதில் சொல்ல என்று இவனுக்குத் தெரியவில்லை.
"என்ன மாமா இது இதுக்குப் போய் ஆராய்ச்சி பண்ணிட்டு? அப்படிப் பகிர்ந்தளித்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு ரொம்ப அதிகமாவே அள்ளி வழங்கியிருக்கிற ஆண்டவனுக்கு மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு நன்றி சொல்றதை விட்டிட்டு...?"
அவரை அமைதிப் படுத்துவது லேசான காரியமாக இருக்கவில்லை.

ஆனால் அரை மணி நேரத்துக்குப் பின் வீடு திரும்பிய கிஷோரிடம் பழைய கலகலப்பு திரும்பியிருந்ததைப் பார்த்து யாழினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
(’அமுதம்’ அக்டோபர் 2013 இதழில் வெளியானது.)
<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

Sunday, February 9, 2014

நல்லதா நாலு வார்த்தை - 25


 
'லக்கின் தெளிவே
எல்லா சாதனையின்
ஆரம்பமும்.'

- Clement Stone
('Definiteness of purpose is the
starting point of all achievement.')

<>

'நான் தோற்கவில்லை,
பத்தாயிரம் வழிகளை
பலிக்காது அவைகளென
அறிந்து கொண்டேன்.'

-Thomas Edison
('I haven't failed. I've found 10000
ways that won't work.')

 
<>

'எதிர்காலத்தை அறிந்துகொள்ள
ஆகச் சிறந்த வழி
அதை நாமே உருவாக்குவதே!'

- Alan Kay
('The best way to predict the future is to invent it.')

<>

'ந்தோஷம்,
சார்ந்திருப்பது நம்மை.'

-Aristotle
('Happiness depends upon ourselves.')

<>

'விஷயங்கள் எத்தனையை அதன்போக்கில்
விட்டு விட முடிகிறதோ அந்த
விகிதத்தில் ஒரு மனிதன் பணக்காரன்.'

- Thoreau
('A man is rich in proportion to the number of things
he can afford to let alone.')
<>
 
'நேசிக்க வேண்டிய நபரைவிட
யோசிக்க வேண்டிய பிரசினை
அதி முக்கியம் ஆக விடாதீர்.'

- Barbara Johnson
('Never let a problem to be solved become
more important than the person to be loved.')


<>
'ங்களைப் பற்றியே
பேசிக்கொண்டிருக்காதீர்கள்;
அதுதான் நடந்துவிடுமே நீங்கள்
அகன்றதும்?'

-Wilson Mizner
('Don't talk about yourself; it will be
done when you leave.')


<<<<>>>>

(படம்- நன்றி: கூகிள்)

Sunday, February 2, 2014

தங்களுக்கும்...


அன்புடன் ஒரு நிமிடம் - 53
 ணமே தூக்கியடித்தது ஆளை.

ஹைதராபாத் பிரியாணி.  மிக ஸ்பெஷலாகத் தயாரித்திருந்தாள் தியாகுவின் மனைவி உமா.

"என்னடா தடபுடலா இருக்கு இன்னிக்கு?" என்றபடியே டைனிங் டேபிள் முன் அமரும்போது அதை எதிர்பார்க்கவில்லை வினோத். யமுனாவும் தான்.

சூப்பர் டேஸ்ட் என்று எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்க தியாகு மட்டும் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்தான்.

"என்னடா நீ சாப்பிடலே? பிரியாணின்னா உசிராச்சே உனக்கு?"

"அதுவா அங்கிள்? இன்னிக்கு அவருக்கு பிரியாணி கிடையாது," என்றாள் தியாகுவின் பெண்

"என்ன விஷயம்?"

"ஒரு சின்ன பனிஷ்மெண்ட்.தியாகுவின் பையன் ரவின்.

என்ன தப்பு பண்ணினான்?"

"அதுவா? அவரையே கேளுங்க," என்றாள் சித்ரா.

"ஷூவைக் கழற்றாமல் கிச்சன் வரை வந்துட்டேன் நேற்று. இது மூணாவது தடவை. அதான் எல்லாரையும் மாதிரி எனக்கும் ஒரு..."

என்ன வற்புறுத்தியும் குழந்தைகளே சொல்லியும் சாப்பிடவில்லை. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது அவன் சாப்பிடாமல் தாங்கள் மட்டும் சாப்பிட்டது.  

அப்புறமாக வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது "இந்தாடா முடிச்சிட்டேன்!," என்று சித்ரா ஒரு நோட்புக்கை தன் மகனிடம் தர, அதை வாங்கிப் பார்த்தான் வினோத். " என்ன எதாச்சும் கரெஸ்பாண்டன்ஸ்  கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?"

உள்ளே வரி வரியாக இதென்ன...

'நான் இனிமேல் நகம் கடிக்க மாட்டேன்.'

'நான் இனிமேல் நகம் கடிக்க மாட்டேன்...'

"என்ன இது இம்பொசிஷன்  மாதிரி..."

"அதே தான் மாமா' இவங்களுக்கு நிச்சயமா தரணும்இதோட அஞ்சாவது. அதான் இந்த ஐநூறு!" என்று பதில் வந்தது. 

மறுநாள் தியாகுவை இலக்கியக் கருத்தரங்கு ஒன்றுக்கு அழைத்தான். "என்னடா வர்றியா இல்லே வீட்டில எதாச்சும் இம்பொசிஷன் வேலை ?"

"கிண்டலா? அப்படியே இருந்தாலும் போயிட்டு வந்து எழுத அனுமதி உண்டாக்கும்! இருந்தாலும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க, பிள்ளைகளுக்குத் தெரிகிற, அவங்க செய்தால் தப்புன்னு சொல்லுகிற சில விஷயங்களை நாமும் சில வேளைகளில் செய்யறோம். நைசா ஏதாச்சும் சாக்கு அல்லது ஆழமா ஏதும் காரணம் சொல்லி நழுவிடறோம்அவங்க தப்பு செய்தால் மட்டும் குற்றம் சொல்லிவிட்டு அதே மாதிரி நாம் நடந்துக்கும்போது மட்டும் கண்டுக்காமல் இருந்தால் நம்ம மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பும் பிரமிப்பும் நம்பிக்கையும் ரொம்பவே குறைஞ்சு போயிடும் இல்லையாநம்ம கண்டிப்புக்குப் பின்னாலிருக்கிற காரணம் சரியானதுன்னு அவங்களுக்கு ஐயமறப் புரியணும் இல்லையா? அதனாலதான் இப்படி எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் வெச்சிருக்கோம் நானும் அவளும்."

அவன் விளக்கம் இவனுக்கு ஓர் விழிப்பைக் கொடுத்தது.

('அமுதம்' அக்டோபர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
( படம் - நன்றி: கூகிள் )