அன்புடன் ஒரு நிமிடம் – 7
யாரோ அவர்கள்?
''முன்னேறுவது யார்? வெகு சிலரே. நிறைய பேர் தழுவுவது தோல்வியையே. அந்த கொஞ்சம் பேர் எந்த
வகையினர் என்று கொஞ்சம் சொல்லுங்க தாத்தா,'' கேட்டான்
அபிஜித்.
''நீ என்ன நினைக்கிறே, அதை முதலில்
சொல்லேன் பார்க்கலாம்."
''தங்கள் நம்பிக்கைகள், இலக்குகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதவர்கள். Those who never change
them, happen what!. அவங்க தான்
முன்னேறுகிறவங்க இந்த அவனியில்.''
''அதெப்படி?'' சிரித்தார். ''அவர்கள்
வாழ்கிற அந்த மொத்த வருடங்களில் எத்தனையோ
விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப தங்கள் நினைப்பை மாற்றிக்
கொள்ளாமல் அத்தனை காலமும் இருப்பது எப்படி சரியாகும்? முன்னேற்றம்
என்பது தொழில் அல்லது வேலையில், குடும்ப வாழ்வில், ஆரோக்கியத்தில்
என்று பல தளத்தில் நிகழ வேண்டியது. அதுதான் வாழ்வு
மொத்தத்துக்குமான முன்னேற்றம்.''
''அப்படீன்னா தங்கள் நம்பிக்கைகளையும் இலக்குகளையும்
அவ்வப்போது மாற்றிக் கொள்கிறவர்கள்? Those who change them as often as they can?”
''நோ. அவர்களும்
பல வேளைகளில் தோற்றுப் போகிறார்களே? முன்னேற அவர்களால் எப்படி முழுதும் சாத்தியப்படும்? எதிலுமே
பிடிப்பின்றி முழு நம்பிக்கையின்றி அடிக்கடி தங்கள் நினைப்பை மாற்றிக்
கொள்கிறவர்கள் எத்தனை சதவீதம் முன்னேற வாய்ப்பு இருக்கும்? அப்படி
அடிக்கடி மாறுகிறவர்கள்.. they are no better in succeeding, either!”
''அப்படீன்னா யார்தாம் ஜெயிக்கிறவங்கன்னு சொல்றீங்க?''
''சொல்றேன். சரி இன்னும் யார் மீதி இருக்கிறாங்க? அவர்கள்
எப்படிப்பட்டவர்கள்?''
''மாறுவதா வேண்டாமா என்று மனம் குமைகிறவர்கள். மாறத் தயங்குபவர்கள். மாறணும்னு
தெரியுது, ஆனா முடியலே என்கிறவர்கள். எப்படியும் மாறணும் என தீர்மானித்து ஆனால் அதற்கான
எந்த உறுதியான நடவடிக்கைகளிலும் இறங்காதவர்கள். இவர்களால்
தானே உலகம் நிரம்பிக் கிடக்கிறது? இவர்கள்
தானே மெஜாரிட்டி?''
''ஆம். அவர்களாலும் எப்போதும் வெல்ல முடியாது என்பது உனக்குத் தெரிந்ததே.''
''ஸோ, வெல்கிற வகையினர் என்று...யாரைத்தான் சொல்வீர்கள்?''
''எந்த வகையினருமே இல்லை. வெற்றி என்பதே அதை அடைகிற காலம் சார்ந்தது. காலம்
சார்ந்த ஒன்றுக்கு எப்படி எக்காலத்துக்கும் பொருந்தும் definition இருக்க
முடியும்?''
''அதாவது?''
''சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரியத்தை செய்தால் அது
வெற்றியடைகிறது. கவனி. அது, அவன் அல்ல. இதை வைத்து எப்படி மனிதர்களை அடையாள படுத்துவது? வகை
பிரிப்பது?''
''அப்படியானால் வெற்றி பெற நாம் செய்ய வேண்டியது என்று எதைச் சொல்வீர்களாம்?''
"ஒரு விஷயத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை
செய்வது. ரெண்டு எப்போதும் முயன்று கொண்டே இருப்பது.''
('அமுதம்' - மே 2012 )
<<<<>>>