விழுந்து விழுந்து சிரித்தவர்கள் வைத்திருக்கும் லிஸ்டில், விடாது இடம் பெறும் ஜோடி லாரல் ஹார்டி! 1940 களின் காமெடி மன்னர்கள்!
அவர் (லாரல்) ஏதாவது தத்து பித்தென்று பண்ணிவிடுவார். இவர் (ஹார்டி) கொடுக்கிற கோப ரீயாக்ஷன் இருக்கிறதே, அட்டகாசமா இருக்கும். அவர் இன்னஸெண்டாக ஒரு பலகையை தட்டிவிட, இவர் பொதேலென்று கீழே விழுவார். 'கொன்னுடறேன் பாரு!' கோபாவேசமாக எழுந்து துரத்துவார்.
ஹார்டிக்கு மேனர்ஸ், எடிகட் எல்லாம் முக்கியம். பதவிசாக அவர் பேசும் ஸ்டைலே அழகாயிருக்கும். லாரல் ஆல்வேய்ஸ் கவனப் பிசகு. அதனால் நேரும் அவதி ஹார்டிக்கு! பல்லைக் கடிப்பதும் தலையைப் பிய்ப்பதுமே இவர் வேலையாகிவிடும்.
எப்படி உருவாச்சு இந்த comic duo? மூணு படங்களில் அவங்க சேர்ந்து நடித்த காட்சிகளில் ஜனங்க ரீயாக்ஷனைப் பார்த்த ஸ்டூடியோ டைரக்டர் Leo McCarey அந்த காமெடி ஜோடியை தொடர்ந்து போட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவர்களும் கைவரிசையைக் காட்ட, விமரிசையாக ஓடின படங்கள் வரிசையாக...!
1932 இல் ஆஸ்கார் Best Short Film அவார்ட் கூட வாங்கிவிட்டார்கள். ‘Saps at Sea,’ ‘Chums at Oxford,’ 'Way out West’ எல்லாம் காமெடி காவியங்கள்.
எப்பவும் அப்பாவை உதைக்கிறாரேன்னு ஹார்டியைக் கண்டாலே ஆகிறதில்லே லாரல் பொண்ணுக்கு. அவளுக்காகவே 'One Good Turn' படத்தில் ஹார்டியை தான் உதைப்பதாக சீன் வைத்தார் அப்பா லாரல்.
John Wayne -உடன் நடித்த ஒன்றுமாக மொத்தம் 417 படங்கள் நடித்துவிட்டார் ஹார்டி. Babe Hardy என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்தவர் பெயரை Oliver Hardy ஆக்கியவர் நியூமராலஜிஸ்ட்.
ஹார்டி கண் மூடியபின் லாரல் மூவீ காமிரா முன் வர முன்வரவேயில்லை எத்தனையோ அழைப்பு வந்தும்!
Stan Laurel... ஜூன் 16. பிறந்தநாள்!