யோசித்ததுண்டா நீங்கள்? யோசித்தார் அவர். கண்டு பிடித்தார்.
சூரியனிலிருந்து பாயும் ஒளி அலை அதைவிட மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட அணுத் துகள்களால் வளிமண்டலத்தில் சிதறடிக்கப் படுகிறது. அலையில் நீளம் குறைந்த நீலம் அதிகமாகச் சிதறடிக்கப் பட, அதை நாம் பார்க்கிறோம் நீலவானமாக.
அந்த முதல் விளக்கம் Rayleigh Scattering என அவர் பெயரிலேயே வழங்கப் படுகிறது.
Lord Rayleigh... இன்று பிறந்தநாள்.
ரொம்பச் சுவாரசியம் இவர் Argon என்ற வாயுவைக் கண்டு பிடித்தது. நைட்ரஜனின் அடர்த்தியைத்தான் அளக்க ஆரம்பித்தார் அவர். காற்றிலிருந்து மற்ற வாயுக்களைக் கழற்றி விட்டு அதைத் தனியே பிரித்தெடுத்தார். அளந்த அடர்த்தி லேபில் தயாரித்த நைட்ரஜனின் அடர்த்தியைவிட அதிகமா இருந்தது. வில்லியம் ராம்ஸே என்ற விஞ்ஞானியும் சேர்ந்து கொள்ள, காற்றில் கூடுதலா இருக்கும் அந்த ஏதோ ஒன்றைக் கண்டு பிடித்தார். அதான் ஆர்கன். காற்றின் மூணாவது முக்கிய வாயு. ரெண்டு பேருக்கும் நோபல் கிடைத்தது.
சின்ன வயதில் நோஞ்சானாக உடல் பிரச்சனைகளோடு சிரமப்பட்du பிற்காலத்தில் சாதனையாளர்கள் ஆக மாறியவர்கள்லிஸ்ட் எடுத்தால் மிக நீளத்துக்கு வரும். இவரும் ஒருவர்.
அறிவியலில் அவர் கால் பதிக்காத அத்தியாயம் இல்லை எனலாம். அவர்களாலன்றொ நாம் இன்று சந்திரன் வரை கால் பதிக்கிறோம்?