Monday, April 11, 2016

நல்லதா நாலு வார்த்தை... 67


’உறக்கம் என்பதே நம் 
உடம்பையும் ஆரோக்கியத்தையும் 
பிணைக்கும் தங்கச் சங்கிலி.'
- Thomas Dekker
('Sleep is that golden chain that ties health 
and our bodies together.')


'அப்படி காட்சியளிக்க வேண்டுமென்ற
ஆசையின் அளவுக்கு,
இயல்பாக நாம் இருப்பதை
தடுப்பதொன்றில்லை.’
- La Rochefoucauld
(’Nothing prevents us from being natural 
so much as the desire to appear so.’)

அன்பைத் தேனாகக் கொண்ட 
அருமலரே வாழ்க்கை.'
-Victor Hugo
('Life is the flower for which love is the honey.')

'சிறந்த ஆலோசனை எப்போதுமே
புறக்கணிக்கப்படுவது நிச்சயம்,
ஆனால் அதைக் கொடுக்காமலிருக்க 
அது காரணமாகாது.'
- Agatha Christie
('Good advice is always certain to be ignored, but
that's no reason not to give it.')

’வாழ்வதனையன்றி
வேறு செல்வமில்லை.’
- John Ruskin
('There is no wealth but life.')

'சந்தோஷமாக இருப்பவர் 
சக மனிதரையும் 
சந்தோஷப்படுத்துகிறார்.'
- Anne Frank
('Whoever is happy will make others happy too.')

’அனைவருக்கும் என்னைப் 
பிடிக்கவேண்டுமென்று நான் 
ஆசைப்படவில்லை;
அப்படி சிலர் செய்தால்
என்னைப்பற்றி குறைவாகவே 
எண்ணுவேன் நான்.’
- Henry James
(’I don't want everyone to like me; I should think
less of myself if some people did.’)

'மௌனம் என்பதோர் 
உன்னத உரையாடல் கலை.’
- William Hazlitt
('Silence is one great art of conversation’)

விவேகமுறக் காட்சியளிக்காதிருத்தல்
விவேகிக்கு நல்லது.'
-Aeschylus
('It is best for the wise man not to seem wise.')

'மகிழ்ச்சியொரு வண்ணத்துப் பூச்சி போல. 
தேடிச் செல்கையில் அது 
எப்போதும் உங்கள் பிடிக்கு 
எட்டியே நிற்கும். 
ஆனால் அமைதியாக நீங்கள்
அமர்ந்தீர்களானால்
அது வந்திறங்கலாம் உங்கள் மீதே.’
- Nathaniel Hawthorne
(’Happiness is like a butterfly, which, when pursued, 
is always just beyond your grasp, but which, 
if you will sit down quietly, may alight upon you.')
<><><>

Sunday, April 10, 2016

அவள் - கவிதைகள்...


270
கேட்கும் இசை இனிமை போல
பார்க்கும் திசை இனிமை நீ.

271
உன் சிரிப்பு 
மறைகையில்
நானும்.

272
முற்றுப்புள்ளி வைக்க முடியாமல்
திணறுகிறேன்
உன் மீதான 
கவிதை வரிகளுக்கு.


273
உன் அமைதி 
என்னுள்
கொந்தளிக்கிறது.

274
என் காபி கோப்பையில்
விழும் உன் சில 
வார்த்தைகள் எனத் 
தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன்
சுகர்லெஸ் காபி என்று.


275
நாணம் சிறகடிக்கிறது
மெலிதாய் நீ
நகைத்திடும் போதெல்லாம்.

276
காந்தம் ஊசியை 
நகர்த்துவது போலவே 
உன் பார்வை 
என்னை.


277
ஒளிக் கற்றைகள்
விலகிடும்போது
உன்னிடமிருந்து அவை
புறப்படுகின்றன.

278
நீ தேடாத போதும்
உன் பார்வை என்னை
தேடுகிறது.

279
எப்போதும் சொல்லுகிறாய்
எனக்கு உன்னைப் பிடிக்கிறதென
வார்த்தைகளால் அல்லாது.

280
என் பார்வையில் நீ 
படாததில் கஷ்டமில்லை, என் 
கண்ணுக்குள் நீ இருப்பதால்.

><><