Wednesday, October 6, 2010

தெரியாத விடை


ன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. கணேஷ் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

''இது உங்களுக்கு எத்தனையாவது இன்டர்வியூ?'' என்றார் ஒரு அதிகாரி.

''இருபத்தாறாவது!''

பின் அங்கிருந்த மற்றவர்கள் மாறி மாறி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தனர். எல்லாமே கஷ்டமான கேள்விகள். முதல் கேள்விக்கே தெரியாது என்று பதில் சொன்னான். அது மட்டுமல்ல, அவர்கள் அடுத்தடுத்துக் கேட்ட எட்டுக் கேள்விகளுக்குமே தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

ஒரு மௌன இடைவெளி. வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்பது போலத் தயக்கத்துடன் பார்த்தான் கணேஷ். இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது அவனுக்கு. ஆனால்...

''உங்களை செலெக்ட் செய்து விட்டோம்!'' என்றார்கள்.

''தேங்க்யூ சார்!'' விழிகள் விரிய ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்தவனிடம் அந்த அதிகாரிசொன்னார்...

''என்னடா எந்தக் கேள்விக்குமே நாம சரியா பதில் சொல்லலையே எப்படி இந்த வேலையை நமக்குக் கொடுக்கிறாங்கன்னு பார்க்கறீங்களா? நாங்க கேட்டதெல்லாம் ரொம்பக் கடுமையான, இந்த சேல்ஸ்மேன் வேலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகள். நாளைக்கு நீங்க எங்கள் தயாரிப்பை விற்கப் போகிறப்போ இந்த மாதிரி எத்தனையோ கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்ப உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும்! எங்கள் கேள்விகளுக்கு நீங்க கொஞ்சம் கூடப் பதறாமல் தெரியாது... இது பத்திப் படிக்கலேன்னு பொறுமையா பதில் சொன்னீங்க. இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி!''

(விகடன் 06-03-05 இதழில் பிரசுரம்)

12 comments:

nis said...

நல்லா இருக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

முத வட எனக்கே,இருங்க படிச்சுட்டு வந்துடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்டர்வியூ சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய வந்தாலும் இது தனித்து தெரிகிறது,விகடன் செலக்‌ஷன்னா சும்மாவா?வாழ்த்துக்கள் சார்

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை! நல்லா இருக்கு.

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

ரிஷபன் said...

எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி

நச்சுனு ஒரு பக்கக் கதை அமைக்கிறது உங்க தகுதி..

Chitra said...

இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி!''

..... நல்லா இருக்குது. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

Rekha raghavan said...

புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட உங்களின் ஒரு பக்கக் கதை ஏ.ஒன். பாராட்டுகள்.

ரேகா ராகவன்.

ம.தி.சுதா said...

இண்டர்வியு இப்படியும் இருக்கா..நல்லாயிருக்கு சகோதரம் வாழ்த்துக்கள்....

சிவராம்குமார் said...

நல்ல சிறுகதை!

vasu balaji said...

good one:)

விஷாலி said...

வாழ்த்துக்கள் நண்பரே

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!